ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு, நேற்று முன்தினம் வெளியி
ட்டுள்ளது.
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது; இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள், மத்திய சட்டம் - 1960 பிரிவு மூன்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.
விதிமுறைகள் விபரம்:ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, கலெக்டரிடம் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்அனுமதி தரும் கலெக்டர், போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட வேண்டும்போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விபரத்தை அளித்து, கலெக்டரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்வருவாய், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் இடம்பெற்ற, ஜல்லிக்கட்டு கமிட்டியை, கலெக்டர் அமைத்து, ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை, கண்காணிக்க வேண்டும்ஜல்லிக்கட்டு காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, காவல் துறை நிபுணர்கள் உதவியுடன், கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், 20 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், அவற்றுக்கு இடையே, 60 சதுர அடி அளவில், போதிய இடைவெளி அளிக்க வேண்டும்காளைகள் பாதுகாப்பாக உணர, காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும்.
காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், மழை, வெயில் பாதிக்காமல் கூடாரம் அமைக்க வேண்டும்காயம் இருக்கும் காளைகளை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்போதை பாதிப்புக்கு உள்ளான காளையை, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாதுகாளைகளை பரிசோதனை செய்யும் இடம், ஷாமியானா வசதியுடன் இருக்க வேண்டும்போட்டி நடக்கும் மைதானம், குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர், இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும்வாடிவாசலை மறித்தபடி, போட்டியாளர்கள் நிற்கக் கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15 மீட்டர் அல்லது, 30 வினாடிகள் அளவுக்கு அல்லது மூன்று துள்ளல்கள் வரை, போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்போட்டியாளர்கள், காளையின் வால், கொம்பு ஆகியவற்றை பிடித்து, அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடாதுவாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் துாரத்தில், பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும்பொதுப்பணித் துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்போட்டியாளர்களை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்போட்டியாளர்கள் மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது