உள்தாள் இணைக்கப்படாத ரேஷன்கார்டுகள்... விரைவில் ரத்து!

உள்தாள் இணைக்கப்படாத ரேஷன்கார்டுகள்... விரைவில் ரத்து! சிக்கும் "போலி'களை கண்டு அதிகாரிகள் திகைப்பு!!!
       திருப்பூர் மாவட்ட அளவில், 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில்,66 ஆ
யிரத்துக்கும்  மேற்பட்டவை, ரத்து செய்யப்பட்டன.

        அதன் பிறகும், உள்தாள் பெற்று புதுப்பிக்காமல் பல கார்டுகள் இருப்பது, அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவை, விரைவில் ரத்து செய்யப்படவுள்ளன. 
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்

களுக்கு முன்பு, 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று கிடுக்குப்பிடி' போட்டதால், போலி கார்டுகளும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த ரேஷன் கார்டுகளும் நீக்கப்பட்டன.

கடந்த மாத நிலவரப்படி, 7.20 லட்சம் ரேஷன் கார்டுகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிச., மாதத்துடன், ரேஷன் கார்டு காலாவதி

யானதால், வழக்கம் போல் உள்தாள் இணைத்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 7.20 லட்சத்துக்கும் அதிகமான கார்டுகள் இருப்பதாக கூறி வந்த அதிகாரிகள், ஏழு லட்சம் உள்தாளை மட்டுமே

வினியோகித்தனர்.

பொங்கல் பரிசு, வேட்டி சேலை என, இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூட, உள்தாள் பெற முன்வராமல், பல கார்டுதாரர்கள் காலம் கடத்துவது, அதிகாரிகளை திகைப்படைய செய்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் பெறாமல், ஒருவர் கூட ஆதார் பதிவு

செய்யாத, 66 ஆயிரத்து, 827 கார்டுகள், ரத்து செய்யப்

பட்டன. தற்காலிகமாக ரத்து செய்த கார்டுகளுக்கு,

உள்தாள் வழங்கப்படாது என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக, போலி கார்டுகளை "பில்டர்' செய்த பிறகும், ரேஷன் கடையிலும், 50 முதல், 70 பேர் வரை, உள்தாள் பெறாமல் இருப்பது, அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மாவட்ட அளவில், 7.50 லட்சத்துக்கும் அதிகமான கார்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், ஆதார் பதிவுக்கு பிறகு, 66 ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுகள், ரத்து செய்யப்பட்டன; மொத்தம், 6.90 லட்சம்

கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

இருப்பினும், ஏழு லட்சம் உள்தாள்கள், அச்சிட்டு பெறப்பட்டது. அப்படியிருந்தும், ஒவ்வொரு கடையிலும், 1 முதல், 2 சதவீதம் வரையிலான கார்டுதாரர்கள், உள்தாள் பெற முன்வரவில்லை. அவை, விரைவில் ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மாவட்டத்தில், 7.50 லட்சத்துக்கும் அதிகமான கார்டுகள் இருந்தன. ஒருநபர் கூட ஆதார் பதியாததால், 66 ஆயிரம் கார்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

"இறுதியாக, 6.95

லட்சம் கார்டுகள் மட்டும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவற்றிற்கு, புழக்கத்தில் உள்ள கார்டுகளுக்கும், பலர் உள்தாள் பெறாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

"ஒவ்வொரு கடையிலும், 50 முதல், 70 உள்தாள்கள் பாக்கியுள்ளதால், கார்டு எண்ணிக்கை மேலும் குறையும் என்று கருதுகிறோம்,' என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)