கால்நடை ஆய்வாளர் பணி நியமனங்கள் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து இருக்கும் நீதிபதி உத்தரவு.

விதிகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு: கால்நடை ஆய்வாளர் பணி நியமனங்கள் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து இருக்கும் நீதிபதி உத்தரவு.

 கால்நடை ஆய்வாளர்கள் விதிகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில்
290 கால்நடை ஆய்வாளர் பணி நியமனம் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐகோர்ட்டில் மனு நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் பழனிதங்கம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பிளஸ்-2 முடித்துள்ளேன். நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2008-ம் ஆண்டு பதிவு செய்துள்ளேன். கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 290 கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அந்த துறையின் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது. இதில் 19 பேர் தேர்வு செய்யப்பட்டு 30.9.2013 அன்று அவர்களுக்கு கால்நடைத்துறை இயக்குனரால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் பதிவு மூப்பு பட்டியல் எப்படி தயாரிப்பது என்பது குறித்து வேலைவாய்ப்பு அலுவலக இயக்குனர் விதிமுறைகளை உருவாக்கி இருந்தார். இந்த விதிமுறைகளுக்கு புறம்பாக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதிவு மூப்பு பட்டியலை தயாரித்து அனுப்பி உள்ளார். அதாவது நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி அனுப்பிய பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 5 பேர் அதிகபட்ச வயதை தாண்டியவர்கள் ஆவர். நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பரிந்துரைத்த பட்டியலில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததால் அனைத்து தகுதியும் உடைய என்னைப்போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்து செய்ய வேண்டும் இதேபோன்று மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட பதிவு மூப்பு பட்டியலிலும் முறைகேடு நடந்திருப்பது தெரிய வருகிறது.
அரசியல் செல்வாக்கு காரணமாக தகுதியில்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால்நடைத்துறை ஆய்வாளர் பணி நியமனம் அனைத்தும் சட்டவிரோதமானதாகும். எனவே, 290 பேருக்கு கால்நடை ஆய்வாளர் பணி வழங்கிய கால்நடைத்துறை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றி புதிதாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் ஆட்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 30.9.2013 அன்று கால்நடைத்துறை இயக்குனரால் மேற்கொள்ளப்பட்ட 290 கால்நடை ஆய்வாளர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று உத்தரவிட்டார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank