குடும்ப அட்டையில் உள்தாள் இணைப்புப் பணி: இன்று முதல் தொடக்கம்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைகளை ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாள் இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழ
மை (ஜனவரி 1) தொடங்குகிறது.
தமிழக அளவில் 2 கோடிக்கும் மேல் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் விலையில்லா அரிசி, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவை மலிவு விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகளின் பயன்பாட்டுக் காலம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இது போன்ற காரணங்களால் குடும்ப அட்டைகள் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்புச் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் அந்தந்த பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடையிலும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற உள்ளது.
23.50 லட்சம் உள்தாள்கள்:
இது குறித்து நியாய விலைக்கடை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
சென்னையில் 1800 கடைகளில் 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளதால், 23.50 லட்சம் உள்தாள்கள் அச்சடித்து ஏற்கெனவே கடைக
ளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலின்றி 100 குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைப்புப் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.