பிஎஸ்என்எல்: பணமில்லா பரிவர்த்தனைக்கு புதிய செயலி அறிமுகம்


       வாடிக்கையாளர்களுக்கென "மொபிகேஷ்' எனும் புதிய செயலியை பிஎஸ்என்எல் எஸ்பிஐ
இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

           இதன்மூலம் செல்லிடப்பேசியில் சாமானியரும் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என பிஎஸ்என்ல் தெரிவித்துள்ளது.


இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பாரத ஸ்டேட் வங்கியும் இணைந்து செல்லிடப்பேசி பரிவர்த்தனை (மொபிகேஷ்) எனும் புதிய செயலியை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த செயலியை சென்னை பிஎஸ்என்எல் வட்ட பொதுமேலாளர் கலாவதி, பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளர் இந்து சேகர் தொடக்கி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கென "மொபிகேஷ்' எனும் புதிய செயலி சாதாரண, ஆண்ட்ராய்டு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப செல்லிடப்பேசியில் பயன்படுத்தலாம். அதுபோல், கிராமப்புற பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குப் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு பெரிதும் உதவும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறு இயங்கும்?: சாதாரண, இணையதள வசதி கொண்ட செல்லிடப்பேசியில் வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் செயலியை 5 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன்மூலம், பதிவிறக்கப்பட்ட செயலி மூலம் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கி கணக்கிலிருந்து, இந்த புதிய செயலிக்கு பண இருப்பு ஏற்படுத்திக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அனைத்துவிதமான கட்டணத்தையும் செலுத்தலாம்.

அதுபோல், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சில்லறை வர்த்தக கடைகளில், செயலி இருப்பைப் பொறுத்து ரூ.500, ரூ.1000 வீதம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதுபோல், பணப்பரிமாற்றம், பயணச்சீட்டு, சினிமா, மின்சார, செல்லிடப்பேசி உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துவதற்கும், செல்லிடப்பேசி டாப்-அப் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், சாமானியர்களும் எளிமையான முறையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இதற்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணையே, செயலி கணக்குஎண்ணாகவும் (யூசர் ஐடி), ரகசிய எண்ணாக ஓடிபி எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு செயலியாக அமையும்.

இதுகுறித்த மேலும் பல்வேறு தகவல்களுக்கு 18004253800, 1800112211 உள்ளிட்ட கட்டணமில்லா எண்களில் தொடர்புகொள்ளலாம். அதுபோல, அந்தந்த வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், பிஎஸ்என்எல் இணையதளத்தின் வாயிலாகவும் விவரங்கள் அறிந்துகொள்ளலாம் என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022