புதிய மின் இணைப்பு: இ -சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்


           வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர் தமிழக அரசின் இ -சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

            இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் குறைந்த தாழ்வு அழுத்த (வீடுகளின் பயன்பாட்டுக்கான) புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

மேலும், உயர் அழுத்த புதிய மின் இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இந்தச் சேவை அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில், வீடுகளின் பயன்பாட்டுக்கான குறைந்த தாழ்வு அழுத்த புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், தமிழக அரசின் இ -சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே உள்ளது போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)