குற்றச்சாட்டுகளை மறுத்த வாட்ஸ் ஆப்!


    2016 ஆண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் end-to-end Encrypted புதிய முறையை அறிமுகபடுத்தியது.           இந்தப் புதிய முறையின் மூலம் மெசேஜ் அனுப்பியவரும் பெறுபவரும் மட்டுமே அ
த்தகவலை பார்த்துக்கொள்ள முடியும். பாதுகாப்பு அம்சம் அதிகம் என்பதால், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை அடைந்தது. Sender மற்றும் Receiver

Security Key ஆப்ஷன்களை பயன்படுத்தி தகவலை பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த கார்டியன் பத்திரிகையின் ஆராய்ச்சியில், இந்தப் புதிய முறை பாதுகாப்பானது இல்லை என கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதனைப் பற்றி செய்தியை [எச்சரிக்கை: வாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பு இல்லை](http://minnambalam.com/k/1484332217), இதில் தெளிவாக கூறியிருந்தோம்.

இந்நிலைடில், வாட்ஸ் ஆப் நிறுவனம், இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்பமானது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. பயன்பாட்டாளர்கள் ஆஃப்லைன் சென்ற பிறகு அதனை வேறொருவர் படிக்கமுடியாது. ஏன், வாட்ஸ் ஆப் நிறுவனமே நினைத்தாலும் முடியாது. இதனை பிரத்யேகமாக கொடுத்திருக்கும் Security Key மூலமாகவே மட்டும் தான் பார்க்கமுடியும். அந்த Key ஸ்மார்ட்போன்கள் மூலம் இணைக்கப்பட்டவர்களுக்குள் மட்டும் தான் தெரியும். அதனால் இது பாதுகாப்பாக ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு தகவலை பறிமாறிக் கொள்வதற்கு மட்டுமே. இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் கார்டியன் பத்திரிகையின் கணிப்பை தவறு எனக் கூறுகின்றது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)