விண்வெளி பற்றி முழுமையாக அறிய முடியாது!
விண்வெளி ஆராய்ச்சிகள் மூலம் விண்ணில் இருக்கும் மர்மங்களை வெளிகொண்டு வந்திருக்கின்றனர், உலக விஞ்ஞானிகள். கிரகம் விட்டு கிரகம் செல்லும் ஸ்பேஸ்
ஷிப்பை தயாரிக்கும் முனைப்பில் இருக்கும் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
ரஷ்யாவை சேர்ந்த நோவோசிபிர்ஸ்க் பல்கலைகழகத்தை சார்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விண்ணைப் பற்றி எவராலும் முழு உண்மையை கண்டறிய முடியாது என தெரிவித்திருக்கின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கபட்ட வரை விண்ணில் 4.9 சதவீதம் மட்டுமே சூரிய குடும்பம் உள்ளது. அதனை தவிர்த்த 95.1 அளவில் வெறும் dark energyகள் மட்டுமே விண்ணில் உள்ளன. அதில் வெறும் தூசி அளவு மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இதனால், தொழில்நுட்பம் என்ன தான் அதிகபடியான வளர்ச்சியை பெற்றாலும், விண்ணை குறித்த கேள்விகள் மட்டும் வளருமே தவிர மற்றபடி விண்ணின் மர்மங்களை அவிழ்க்கமுடியாது எனத் தெரிவித்துள்ளனர்.