பூமி சுழற்சி வேகத்தை ஈடுகட்ட இந்திய நேரத்தில் கூடுதலாக ஒரு வினாடி சேர்ப்பு!!!


பூமியின்
சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்டுவதற்கு கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டுவது இயல்பான ஒன்று.

அந்த வகையில், இப்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், நேற்று முன்தினம் இரவு 11 மணி 59 நிமிடம் 59 வினாடிகள்
ஆனபோது, ஒரு வினாடி கூடுதலாக சேர்க்கப்பட்டு புதிய ஆண்டு பிறந்தது.இது தினசரி வாழ்க்கையில் மெல்லிய தாக்கத்தை உண்டுபண்ணினாலும், செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.அணு கடிகாரத்தில் ஒரு வினாடியை அதிகரித்து, மாற்றம் செய்ததை இந்திய நேரத்தில் பிரதிபலிக்கிற வகையில், காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடியின்போது கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டது.இதுபற்றி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குனர் டி.கே. அஸ்வால் கூறும்போது, ‘‘பூமி அதன் சொந்த அச்சில் சுழல்வது ஒழுங்கான ஒன்றல்ல. சில நேரங்களில் அது வேகமாகவும், சில நேரங்களில் மெதுவாகவும் இருக்கும். இதற்கு நில நடுக்கம், நிலவின் ஈர்ப்பு சக்திகளால் அடிக்கடி ஏற்படும் கடல் அலைகள் என பல காரணங்களை சொல்லலாம்’’ என்றார்.
‘‘முடிவில் யு.டி.ஐ. என்னும் வானியல் நேரம் படிப்படியாக குறையும். அது யு.டி.சி. என்னும் அணு நேரத்துடன் ஒத்துப்போகாது. வானியல் நேரமும், அணு நேரமும் மாறுபடுகிறபோது, அது 0.9 வினாடியாக இருக்கிறபோது, உலகளவில் அணு கடிகாரங்கள் மூலம் கூடுதலாக ஒரு வினாடி வானியல் நேரத்தில் சேர்க்கப்படும்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்திய கடிகாரத்தில் ஒரு வினாடி கூடுதலாக சேர்ப்பதை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படுகிற தேசிய இயற்பியல் ஆய்வகம் செய்யும்.இந்த ஆய்வுக்கூடம்தான் நேற்று இந்திய நேரம் காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடி ஆனபோது ஒரு வினாடி கூடுதலாக சேர்த்தது. இந்த ஒரு வினாடி லீப் வினாடி என்று அழைக்கப்படுகிறது.1972–ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 மாதம் முதல் 7 வருடங்கள் வரையிலான இடைவெளியில் 36 லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)