பொருளாதார வளர்ச்சி குறையும்! - ஆய்வு!!!
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணித்திருந்த விகிதத்தைவிட ஒரு சதவிகிதம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2016-17 நிதியாண்டில் 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது ஆய்வறிக்கையில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன் பின்னர் நவம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியான நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடையும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.