உலக சாதனைக்குத் தயாராகும் இஸ்ரோ !!


       ஒரே ராக்கெட் மூலம் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம். வரும் 27ம் தேதி இவற்றை விண்ணுக்குச் சுமந்து செல்ல உள்ளது PSLV-C37 ராக்கெட்.
இந்த 103 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டால், இது ஒரு உலக சாதனையாக மாறும்



*பெங்களூரு முழுவதும் விரைவில் மெட்ரோ சேவை*

பெங்களூருவில் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெங்களூரு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை அளிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. 'பெங்களூரு மொபிலிட்டி' எனப்படும் இத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும் எனத் தெரிகிறது

*ஜன.5ல் தமிழகத்தில் விவசாயிகள் மறியல்*

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த அவர்கள் திட்டம். இது தொடர்பாக தி.மு.க.வின் ஆதரவையும் கோரியுள்ளது விவசாயிகள் சங்கம்

*இந்திய ரூபாய் மதிப்பு சரிவு*

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.97. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.92.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)