கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.


           கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை
தள்ளுபடி செய்தனர்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், 
''நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த 2008-ம் ஆண்டு கல்வித்தகுதியை மறைத்து நான் வங்கிப் பணியில் சேர்ந்ததாகக் கூறி வங்கி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் என்னை பணிநீக்கம் செய்தது சரியானதுதான் என தனி நீதி பதி உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி யிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
 எந்த ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ, தங்களது பணியாளர்களை தேர்வு செய்ய தங்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளை வகுத்து வைத் துள்ளன. பணியாளர்களின் கல்வித்தகுதியும் அதில் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக அந்த கல்வித் தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, சட்டப்படியானதும் கூட. மனுதாரர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பகுதிநேர பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணி்க்கு கடந்த 2008-ல் விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் விண்ணப் பிக்க வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அதன்படி, மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்ற உண்மையை மறைத்து, 5-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக மாற்றுச் சான் றிதழைக் காட்டி பணிக்கு சேர்ந் துள்ளார். அதன்பிறகு வங்கி நிர்வாகம் அதே ஆண்டு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்த போது, இதே மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கூறி அந்த பணிக்கும் விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம் உண்மையைக் கண்டு பிடித்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது.
நடத்தை விதிமீறல் மனுதாரர் உண்மையை மறைத்து பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு சேர்ந்ததால் அந்த பணியிடம் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அரசு அல்லது வங்கி பணிகளில் உண்மையை மறைப்பது என்பது நடத்தை விதிமீறல்தான். எனவே மனு தாரரை பணி நீக்கம் செய்தது சரியானதுதான். தனி நீதிபதி சரியான உத்தரவைத்தான் பிறப் பித்துள்ளார் என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மோடி அறிவிப்பு.
ஏழைகளுக்கு மானியத்துடன்கூடிய வீட்டுக்கடன் வழங்கப்படும். கர்ப் பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
 காலாவதியான அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக் கெடு கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், புத்தாண்டை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரை யாற்றினார். அப்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அவர் விளக்கம் அளித்தார். பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்தார். அவர் கூறியதாவது: ஊழல், கறுப்புப் பணம் ஆகிய வற்றால் நாட்டு மக்கள் சிறைபட்டுக் கிடக்கின்றனர். ஊழலுக்கு முன்பு நேர்மையானவர்கள் மண்டியிடும் அவலநிலை உள்ளது. ஊழலின் பிடியில் இருந்து விடுதலை பெறவே நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த 50 நாட்களும் மக்கள் எதிர் கொண்ட துன்பங்கள், சிரமங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்ததையும் அரசு அதிகாரிகளுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அறிவேன். எனினும் நாட்டின் நலன் கருதி அனைத்து சிரமங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
நமது நாட்டில் பணப் பரிவர்த் தனையே பிரதானமாக இருந்தது. இதன்காரணமாக கறுப்புப் பணம் பதுக்கப்பட்டது. கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதை தடுக்கவே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்க மக்களோடு இணைந்து மத்திய அரசு ஒரு போரை தொடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிடிபடும் வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருமான வரித்துறை புள்ளிவி வரத்தில், நாடு முழுவதும் 24 லட்சம் பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வரு மானம் ஈட்டுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
ஒவ்வொரு நகரங்களிலும் கார், பங்களா உள்ளிட்ட சகல வசதிகளுடன் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வருமானத்தை மறைத்து வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும். வங்கிச் சேவை சீரடையும் கறுப்புப் பணம், கள்ள நோட்டு கள் தீவிரவாதிகளுக்கு பக்க பல மாக இருந்தன. பணமதிப்பு நீக்க நட வடிக்கையால் தீவிரவாதத்தின் முது கெலும்பு முறிக் கப் பட்டுள்ளது.
இளைஞர்கள் தீவிரவாத பாதையில் இருந்து விலகி வருகின்றனர்.  நாடு முழு வதும் வங்கிச் சேவைகள் விரை வில் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கித் துறைக்கு இது பொற் காலம். ஏழைகள், நடுத்தர வர்க்க மக்களின் நலனுக்காக வங்கிகள் சேவையாற்ற வேண்டும். கிராம மக்கள், ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பெண்கள் முன்னேறி னால் நமது நாடும் முன்னேறும். மானிய வீட்டுக் கடன் பெரும்பாலான ஏழைகளுக்கு வீடு இல்லை. நடுத்தர வர்க்கத்தின ருக்குகூட வீடு என்பது எட்டாத கனவாக உள்ளது. அவர்களின் நலன் கருதி பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்களில் மானியத் துடன்கூடிய வீட்டுக் கடன் வழங்கப் படும்.9 லட்சம் வரையிலான வீட்டுக் கடனில் 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். 12 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீத வட்டி மானியமும் 20 லட்சம் வரையிலான கடனுக்கு 2 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும். ரபி பருவத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் கடன்களுக்கு 60 நாட்களுக்கு வட்டி ரத்து செய்யப்படும்.
அடுத்த 3 மாதங்களில் 3 கோடி விவசாய கிரெடிட் கார்டுகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும். இந்த கார்டுகளை விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறு, சிறு தொழில்களை மேம் படுத்துவதற்காக அந்தத் துறையின ருக்கு வழங்கப்படும் ரூ.1 கோடி கடன் தொகை ரூ.2 கோடியாக உயர்த்தப்படும். சிறு வர்த்தகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்காக அவர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். கர்ப்பிணிகளின் நலன் கருதி விரைவில் புதிய திட்டம் தொடங்கப் படும்.
 அதன்படி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தான உணவு, தடுப்பு மருந்துகளுக்காக அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 டெபாசிட் செய்யப்படும். மூத்த குடிமக்களின் ரூ.7.5 லட்சம் வரையிலான டெபாசிட் தொகைக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)