வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை - மத்திய அரசு!


        வேலையில்லாத இளைஞர்களுக்கும், ஏழை மக்களுக்கும் மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. தேசிய சமூக பாதுகாப்புத் தி
ட்டத்தின் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வேலையில்லாதவர்கள்!


இந்தியாவில் கடந்த ஆண்டு 1.77 கோடிப்பேர் வேலையில்லாதவர்கள் என்று ஐ.நா. சர்வதேச தொழிலாளர் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2017ஆம் ஆண்டில் 1.78 கோடியாக அதிகரிக்கும். 2018ஆம் ஆண்டில் 1.8 கோடியாக உயரும். இதன் அடிப்படையில் வேலையில்லாத திண்டாட்டம் 3.4 சதவிகிதம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பெற்றோர்கள் கடன் வாங்கி பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைத்து, 10 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் சிலர் குடும்ப சூழ்நிலைக்காக கிடைத்த வேலைக்குச் செல்கின்றனர். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பட்டதாரி இளைஞர்கள் துப்புரவு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படி இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஏழைகள்!

இந்தியாவில் ஏழை மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. 194.6 மில்லியன் மக்கள் இந்தியாவில் போதிய உணவின்றி வாடுகின்றனர் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய மக்கள் தொகையில் 15%க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். உலகிலேயே இது அதிகமானதாகும். சீனாவைவிடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வேலையில்லாத இளைஞர்களுக்கும் ஏழை மக்களுக்கும் மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலை இல்லாத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் தேசிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1500 தொகை வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், வேலை இல்லாத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் மாதம் வழக்கப்படும் தொகைக்காக ரூ. 3 லட்சம் கோடி கூடுதல் செலவாகும் என்று கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டால், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)