பி.எப்., ஓய்வூதியர் உயிர் சான்று : கமிஷனர் எச்சரிக்கை


''உயிர்சான்று வழங்காத பி.எப்., ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்,'' என, மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ரபீந்திர சமல் எச்சரி
த்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் பெறுவோர் 2017 ஆண்டுக்கான உயிர்வாழ் மற்றும் மறுமணம் புரியா சான்றிதழ்களை ஜன.,15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.'e-jeevan pramaan portal' இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.


மதுரை பீ.பீ.குளம் கமிஷனர், திண்டுக்கல் மற்றும் சிவகாசி பி.எப்., அலுவலகங்களில் பதிவு செய்யலாம். மின் ஆளுகை மற்றும் பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம். தவறினால் இம்மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

ஜன., 3ல் சிவகாசி பழைய விருதுநகர் ரோடு ஏ.கே.எம். காம்பளக்ஸ் பி.எப். அலுவலகம், 4ல் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோடு ஜி.ஆர்.பவனம் ஐ.என்.டி.யு.சி., அரங்கம் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சியிலும், 5ம் தேதி விருதுநகர் ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமென்ட் பி.ஏ.சி.ஆர்., திருமண மண்டபம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் தேரடி ஸ்டாப் அருணாசலம் வள்ளியம்மை திருமண மண்டபம், 6ம் தேதி மேலுார் மில் ரோடு ஏ.ஆர்.ஆர். காம்பளக்ஸ் வட்ட பொது தொழிலாளர் சங்கம் மற்றும் பழநி அக்ஷயா அகாடமி மெட்ரிக் பள்ளி, ஜன., 9, 10 தேதிகளில் அருப்புக்கோட்டை ராமசாமிநகர் ஸ்ரீராமலிங்க மில்லிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமிலும் பதிவு செய்யலாம், என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)