சி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது
.
இதில், 10ம் வகுப்புக்கு, தமிழ், என்.சி.சி., போன்ற பாடங்களுக்கும், பிளஸ் 2வில், உடற்கல்வி, சமூகவியல் உட்பட, ஐந்து பாடங்களுக்கும், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான பட்டியல், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
CBSE Exam Date Changed For 10th And 12th Standard
ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, தமிழ் உள்பட சில சி.பி.எஸ்.இ. பாடத் தேர்வுத் தள்ளி வைகப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கான இறுதித் தேர்வின் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், த்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளது.
12ஆம் வகுப்புக்கான உடற்கல்விக்கான தேர்வு வரும் ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ஆம் தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.