அச்சமின்றி”* திரைப்படம் சமுத்திரகனியின் *சாட்டை, அப்பா* படவரிசையில் மூன்றாவதாக சமூக அக்கறையுள்ள படம் !!


         கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொணரும் விதமாக வெளிவந்துள்ளது.. 10-ம் வகுப்பில் அரசுப்பள்ளிகளில் முதலாவதாக வரும் மாணவர்களை வளைத்துப்பிடித்து
தங்களது பள்ளியில் 11-ம் வகுப்பில் இலவசமாக சேர்த்து..12-ம் வகுப்பில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து தங்களது பள்ளியின்
கட்டணத்தை உயர்த்தும் தனியார் பள்ளிகள் பற்றியும், அரசுப்பள்ளிகளின் நிலைமை பற்றியும் கூறும் படம்.கல்வித்துறையில் நடைபெறும் விதி மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கலெக்டர் கொல்லப்படுகிறார்..பல கொலைகள் நடக்கிறது.. இதற்குப்பின்னால் தனியார்பள்ளியின் தாளாளரான சரன்யா இருக்கிறார்.
இதுவரை பாசக்கார மனைவி, அம்மாவாக பார்த்த சரன்யா இதில் வில்லியாக வந்து மிரட்டுகிறார்.. ஜனரஞ்சமாக  ஆடல், பாடல், சண்டை , வசனம், கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை  பெற்றோர்கள், மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கிறது..

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)