பெண்களும் குற்றவியல் சட்டமும் !!


       பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறதால், பெண்களின் உடல், திருமணம், மதிப்பு, பெண்மை போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் இது தொ
டர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860 பல பிரிவுகளால் தண்டனை வழங்க வகை செய்துள்ளது.



இந்திய தண்டனைச் சட்டத்தில் அத்தி யாயங்கள் 16,20 மற்றும் 22 ஆகியவை பெண்களுக் கெதிரான குற்றங்கள் பற்றி விவரிக்கின்றன. பிரிவு 304(தீ) மணக்கொடை மரணங்கள் பற்றியது

1) தீக்காயங்கள் அல்லது உடற்காயங்கள் அல்லது சாதாரணமான சூழலில் ஏற்படும் மரணம்

2) அம்மரணம் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் ஏற்பட்டால்

3) கணவனாலோ அல்லது அவரது உறவினர்களாலோ அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால்

4) மணக்கொடைக்காக அல்லது அது தொடர்பாக மேற்படி வன்கொடுமை செய்யப்பட்டிருந்தால்

5) அக்கொடுமை அப்பெண் இறப்பதற்கு முன்பு ஏற்பட்டிருந்தால், அந்த மரணம் மணக்கொடை மரணம் எனக் கருதப்பட்டு குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும். குறைந்தது ஏழு ஆண்டு சிறைத் தண்டனை என்பதே குற்றத்தின் கடுமையை சுட்டிக் காட்டுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 312 முதல் 318 வரை கருக்கலைப்பு, பிறக்காத குழந்தைக்கு காயம், குழந்தையை கவனிப்பாரற்று விட்டு விடுதல் போன்ற குற்றங்களை விவரிக்கிறது. அதற்கான தண்டனை களையும் விவரிக்கிறது.

கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் 1971 மற்றும் கருச்சோதனை தடுப்புச் சட்டம் 1994 இயற்றப்பட்டு கருக்கலைப்பு சிசுக்கொலை குற்றங்களாக கருதப்பட்டு தண்டனை தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 354-இன்படி ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம், ஊறு விளைவித்தால் இரண்டாண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்  டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதித்து தண்டனை தரப்படும்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 366-இன்படி ஒரு பெண்ணை கட்டாயத் திருமணத்திற்காகவோ, வன் புணச்சிக்காகவோ கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

பதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுமியை வன் புணர்ச்சிக்காக கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

வெளிநாட்டிலிருந்து விபச்சாரத்திற்காக 21 வயதுக்கு குறைந்த பெண்ணை இறக்குமதி செய்தால் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366(ஆ) வகை செய்கிறது.

18 வயதுக்கு குறைந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்றால் பத்தாண்டுவரை சிறைத்தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 372 கூறுகிறது., 18 வயதுக்கு குறைந்த பையன் ஆனாலும் திருமணம் ஆன பெண் ஆனாலும் இச்சட்டப்பிரிவு பொருந்தும். அதைப்போல விபச்சாரத்திற்காக மைனர்களை வாங்கினாலும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 373 இன் படி குற்றமாகும்.

பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சி பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375 முதல் 376ஞி. 377 மற்றும் 509 விவரிக்கின்றன.

ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வன்புணர்ச்சி செய்தால் குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய அல்லது ஆயுள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என பிரிவு 376 கூறுகிறது., பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்குக் கீழ் இருந்தால் அவளது விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குற்றமே.

வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அடையாளத்தையும் வெளிப்படுத்தினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228(அ)ன்படி இரண்டாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும். வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் நலனை பாதுகாக்கவே இந்த சட்டப்பிரிவு.

வன்புணர்ச்சி வழக்குகள் திறந்த நீதிமன்றத்தில் நடைபெறக்கூடாது. ரகசியமாக தனி அறையிலேயே நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் காயங்களுக் கான இழப்பீடு வாரியம் ஒன்று அரசியல் சட்டப்பிரிவு 38(1) அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விசயமாகும்.

திருமணம் தொடர்பான குற்றங்கள் பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 493 முதல் 498ல் விவரிக்கிறது.

தனது மனைவியல்லாத இன்னொரு பெண்ணுடன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஏமாற்றி உடலுறவு கொள்வதை குற்றமெனக் கூறுகிறது பிரிவு 493.

தனது வாழ்க்கைத் துணை உயிரோடு உள்ள காலத்தில் இன்னொரு வரை மணப்பது பிரிவு 494,495 இன் கீழ் குற்றமாகும். மோசடி எண்ணத்துடன் திருமணம் புரிவது பிரிவு 496ன் கீழ் குற்றமாகும்.
கள்ளத்தொடர்பு கொண்டு வாழுதல் பிரிவு 494-ன் கீழ் குற்றமாகும்.

குற்ற நோக்கோடு ஒரு பெண்ணை கவர்ந்திழுத்தல் அலலது கூட்டிச் செல்லுதல் அல்லது அடைத்து வைத்தல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரியது.

திருமணமான பெண்ணை கணவனோ அவரது உறவினர்களோ மணக்கொடைக்காக வன்கொடுமை செய்தால் பிரிவு 498(அ)ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய வர்களாவர். இச்சட்டப்பிரிவு 1983-இல் இயற்றப்பட்டது.

ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வார்த்தை யாலோ, ஒலி எழுப்பியோ, சைகையின் மூலமோ அல்லது ஏதேனும் பொருளை வெளிப்படுத்தினாலோ அல்லது அப்பெண்ணின் தனிமையில் குறுக்கிட்டோலோ பிரிவு 509ன் கீழ் குற்றம் புரிந்தவராவார். ஓராண்டு வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)