ஸ்டேட் வங்கியில் மெட்ரோ ரெயிலில் பயணிக்க புதிய கார்டு அறிமுகம்
சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் டோக்கன் முறையில் வசூலிக்கப்படுகிறது.
எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதை அதற்கான கட்டணத்தை கொடுத்தால் டோக்கன் வழங்குவர்.
அதனை அங்குள்ள பெட்டியில் போட்டால்தான் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியும். டோக்கன் பெறாமல் உள்ளே செல்ல முடியாது.
தற்போது பஸ், ரெயில் பயணங்களுக்கு ஆன்- லைன் முன்பதிவு இருப்பது போல மெட்ரோ ரெயிலும் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. இதை ஸ்டேட் வங்கியில் அதன் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அருந்ததி பட்டாச்சார்யா நேற்று தொடங்கி வைத்தார். இவ்வங்கி வழங்கும் கார்டு மூலம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். ரெயில் நிலையத்தில் நுழைந்து இந்த கார்டை கருவியில் ‘ஸ்வைப்’ செய்தால் போதும்.
அதில் இருந்து பயணத்திற்கான கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். ‘மெட்ரோ ரெயில் ஆக்ஸஸ்’ என்று அழைக்கப்படும். இந்த கார்டு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். கார்டு ‘ஸ்வைப்’ செய்த அடுத்த நொடியில் உள்ளே சென்று பயணத்தை தொடரலாம்.
மெட்ரோ ரெயில் கார்டை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கார்டை பயன்படுத்துவதற்கு வருடத்திற்கு ரூ.499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரெயில் பயணத்திற்கும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.