CPS - புது ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது


         தமிழக அரசு பணியில் 200௩ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்ப
ளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை 8 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர், தகவல் அறியும் உரிமைசட்டத்தில் விபரம் கேட்டிருந்தார். இதற்கு நிதித்துறை பொது தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள பதில் விபரம்: இத்திட்டத்தின் கீழ் பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசு பங்குத்தொகை சேர்த்து அரசு நிர்ணயிக்கும் வட்டியுடன் திரும்ப வழங்கப்படும். இத்திட்ட நிதி, நிரந்தர அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; தற்காலிக கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டு உள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2015--16 வரை பணியமர்த்தப்பட்டவர்கள், 4 லட்சத்து 54 ஆயிரத்து 999 பேர்.  
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2003 ஏப்.,1 முதல் தற்போது வரை (2015--16) பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஐந்தாயிரத்து 114 கோடி 42 லட்சத்து 98 ஆயிரத்து 616 ரூபாய். அரசு பங்கு தொகையாக, அதே அளவு தொகை வரவு வைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 222 கோடி 85 லட்சத்து 97 ஆயிரத்து 232.இதுவரை பணி ஓய்வு, இறப்பு போன்றவற்றால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் 1873 பேர்; இவர்களுக்கு தொடர் ஓய்வூதியம் கிடையாது.10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, இருப்பு தொகையில் கடன் வழங்க இயலாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
இதுகுறித்து செல்வம் கூறியதாவது:பத்து ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 25 சதவீதம் கடன் வழங்க, ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டன் வழங்க இயலாது என்றும், எவ்வித அரசாணையும் வெளியிடவில்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைக்காக குழு அமைக்கப்பட்டு, அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. ஓய்வு பெறும் ஊழியருக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறும் வழிமுறைகளை அரசு செய்யவில்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)