கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?
பலருக்கும்கார் வாங்குவதுவாழ்க்கையில் ஒரு பெரும்முதலீடாகஇருக்கிறது.
நம்நாட்டில் கார்வாங்குவோரில் 80 சதவீதத்தினர் கடன்
திட்டங்கள் மூலமாகவே, தங்களது கார் ஆசையைநிறைவேற்றிக்கொள்கின்றனர்.
ஆனால், தங்களது வருவாய்க்குதகுந்தவாறு சரியான கடன்திட்டங்களையும், பட்ஜெட்டையும்தேர்வு செய்வது மட்டுமின்றி, சரியான கால அளவில்மாதத்தவணைகளை திருப்பிச்செலுத்துவதற்கான கடன்திட்டங்களை தேர்வுசெய்வதும்அவசியம். அதுகுறித்த சிலதகவல்களை இந்தசெய்தித்தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறோம்.
கடன் திட்டம்
கார் கடன் திட்டங்கள்பல்வேறுதிருப்பிச் செலுத்தும்கால அளவுகொண்டதாகஇருக்கிறது. புதியகாருக்கு அதிகபட்சமாக7 ஆண்டுகள் [84 மாதங்கள்] வரையிலும், பழைய காருக்கு 5 ஆண்டுகள்[60 மாதங்கள்] வரையிலும் திருப்பிச்செலுத்தும் கால அளவுகள்கொடுக்கப்படுகிறது. பழையகார் என்றால்தயாரிப்புஆண்டுக்கு தக்கவாறுகார் கடன் திட்டத்தின்திருப்பிச்செலுத்தம் கால அளவுமாறுபடும்.
வருவாய்
வருவாய்க்குதக்கவாறுதிருப்பிச் செலுத்துவதற்கானகால அளவை தேர்வுசெய்துகொள்ளலாம். கார் கடன்வாங்குவதற்கு, சிலருக்குவருவாய் போதுமானதாகஇருக்காது. அது போன்றசூழல்களில், மனைவிஅல்லதுகுடும்பத்தில் வருவாய் உள்ளமற்றொருஉறுப்பினரை இணைவிண்ணப்பதாரராகசேர்த்துக்கொண்டுஅதிகபட்சமான திருப்பிச்செலுத்தும் மாதத் தவணைகள்கொண்டகடன் திட்டத்தை தேர்வுசெய்யலாம். இதன்மூலமாக, மாதத் தவணை குறைவாகஇருக்கும்என்பதால், மாதசெலவுகளைசமாளிக்கஏதுவாகும். ஆனால், வட்டி விகிதம்அதிகமாகஇருக்கும் என்பதையும்கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ரூ. 35,000 மாதவருமானம் உள்ளவர்கள்மாதத்தவணை ரூ.10,000க்குமிகாமல்பார்த்துக் கொள்வது அவசியம்.
சரியானகால அளவு எது?
பொதுவாகபுதிய காருக்கு கடன்வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழையகாருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத்தவணைகளைதிருப்பிச்செலுத்தி விடுவதுநல்லது. புதியகாருக்குஅதிகபட்சமான 7 ஆண்டுகள்வரை மாதத்தவணைகள்கொண்ட கடன்திட்டங்களுக்கு வட்டிவிகிதம்அதிகம் என்பதுடன், நீண்டநாள்திருப்பி செலுத்துவதால்உங்களது பொருளாதாரத்திலும்தடுமாற்றத்தைஏற்படுத்தும்.
உபாயம்
மாத பட்ஜெட்டை கருதி, நீண்டகாலகடன் திட்டத்தை தேர்வுசெய்துவிட்டாலும்கூட, அதன்பிறகுஏதேனும் பெரிய தொகைவரும்போது, அதனை கார்கடனில்வரவுவைத்துவிடுங்கள். இதன்மூலமாக, திருப்பிச்செலுத்தும் கால அளவைகுறைத்துக்கொள்ள முடியும். கார் கடன் வாங்கிய6 மாதங்களுக்கு பின்புஇதுபோன்றுகூடுதல்தொகையை வரவுவைக்கவாய்ப்புவழங்கப்படுகிறது. சிலவங்கிகளில் கடன்காலத்தில் 2 முறை கூடுதல்தொகையைவரவு வைக்கும்வாய்ப்பை வழங்குகிறது.
முன்பணம்
காரின்ஆன்ரோடு விலையில் 30 சதவீதத்தை செலுத்தி கார்வாங்குவது நல்லது. அதனைமீறும்பட்சத்தில், வட்டி விகிதம்அதிகரிப்பதோடு, நீண்ட காலம்செலுத்தும் கடன்திட்டத்தைதேர்வு செய்வதற்குதள்ளப்படுவீர். எனவே, ஓரளவுமுன்பணத்தை தயார்செய்துகொண்டு கார்வாங்கும்படலத்தை ஆரம்பிப்பதுநல்லது. தற்போதுபுதியகாருக்கு ஆன்ரோடுவிலையில் 85 சதவீதம்வரைகடன் வழங்கப்படுகிறது. ஆனாலும், அது உங்கள்பொருளாதாரத்திற்குஉசிதமாகஇருக்காது.
பழைய கார் வாங்கும்போது...
கடன் திட்டத்தில் பழைய கார்வாங்குவதைதவிர்ப்பது நலம். மேலும், பழையகார்களுக்குஆண்டுக்கு 15 சதவீதம் முதல் 17 சதவீதம்வரை வட்டி விகிதம்போடப்படுகிறது. கூட்டிக்கழித்து பார்க்கும்போது, ஒருபுதிய காரை தேர்வுசெய்துவாங்குவது நல்லது. ஏன்தெரியுமா?
பழசுக்குபுதுசு பெட்டர்
புதிய காருக்கான வட்டி விகிதம்ஆண்டுக்கு10.5 சதவீதம் என்றசராசரி அளவில்உள்ளது. பழைய காருக்கு கூடுதலாக5 முதல் 7 சதவீதம் வரைவட்டிசெலுத்துவதை தவிர்க்கவழி வகை செய்யும். அத்துடன், ஓடிய காரில்என்னென்னபிரச்னைஇருக்கிறது என்பது தெரியாது. அத்துடன், பராமரிப்பு செலவுஅதிகம் இருக்கும். ஆனால், புதிய கார் வாங்கும்போதுஇந்தஅச்சங்களை தவிர்த்துக்கொள்ள இயலும் என்பதுடன், பராமரிப்பு என்பது சிலஆண்டுகளுக்குபெரியதொந்தரவாக இருக்காது
வங்கிகள்
தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளிலும், தனியார்வங்கிகளிலும் சிறப்பானகார்கடன் திட்டங்கள் உள்ளன. தகுந்த ஆவணங்கள்வைத்திருந்தால், குறைவானவட்டி விகிதத்தைபேரம் பேசிவாங்குங்கள். மேலும், உங்களதுசம்பளம் வரவுவைக்கப்படும்வங்கிகளில்கூடுதல் சலுகைகள் கிடைக்கும். அத்துடன், பிராசஸிங் கட்டணம்இல்லாமலும்வாங்குவதற்குவங்கிஊழியரிடம் பேரம் பேசிபார்ப்பதும்உங்களுக்கு கூடுதல்பலன் தரும்.
உங்களதுசம்பளம்அலுவலகத்திலிருந்துவங்கியில் வரவு வைக்கப்படும்தேதிக்குசில நாட்கள் கழித்துமாதத்தவணை தேதிஇருக்குமாறு வங்கியிடம்கடன்வாங்கும்போதே அவசியம்தெரிவித்துவிடவும். ஏனெனில், சில வங்கிகள் உங்கள் சம்பளம்வரும்தினத்திலோ அல்லதுஅதற்கு முந்தையதினத்திலோ, மாதத் தவணைதேதியைநிர்ணயித்துவிடுவர். இதனால், ஒவ்வொருமாதமும்முன்கூட்டியே பணம்அதில் இருக்குமாறுபார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். எதற்குதேவையில்லாதடென்ஷன்...
அவசரம்வேண்டாம்...
இந்த விஷயத்தில்அவசரப்படாமல், அனைத்துவங்கிகளின்கடன்திட்டங்களையும், அதன்வட்டி விகிதங்களையும்அலசிஆராய்ந்த பிறகேஉங்களுக்கான கார்கடன்திட்டத்தை தேர்வு செய்வதுஎதிர்காலத்தில்எந்தபிரச்னையும் இல்லாமல்இருக்கும்.
வாழ்த்துகள்.