Facebook மற்றும் whatsapp இல் வெளியான கருத்துக்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம்.


Facebook மற்றும் whatsapp இல் வெளியான கருத்துக்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம்...இது முற்றிலும் பொய்யான தகவல்...







*பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில்,எந்த ஒரு தவறான செய்தியையும் எளிதில் பரப்பிவிடலாம்.*
*அதுபோன்ற ஒரு தவறான செய்திதான் இதுவும்.
முதலில் இதில் உள்ள தவறுகளைச் சுட்டுகின்றேன்*
*ஓர் ஆண்டிற்கு ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ விடுப்பு -15 நாட்கள்*
*இந்த மருத்துவ விடுப்பையும் பெரும்பாலான ஆசிரியர்கள் எடுப்பதில்லை.அத்தியாவசியமாக அல்லது ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மட்டுமே இந்த விடுப்பை எடுக்கின்றனர்.*



*EL என்று சொல்லப்பட்டிருக்கும் (Earned Leave)விடுப்பும் வருடத்திற்கு -15 நாட்கள்தான்.இதுவும் பெரும்பான்மையான ஆசிரியர்களால் எடுக்கப்படுவதில்லை.*
*சனி,ஞாயிறுகளைப் பொறுத்தவரை வருடத்தின் 52 வாரங்களிலும் வரும் சனி,ஞாயிறுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி 104 என அந்த அதிமேதாவி தந்துள்ளார்.இதுவும் தவறு.*
*ஏனென்றால்,தொடக்கநிலைப் பள்ளிகள் வருடத்திற்கு 220 நாட்களும்,உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வருடத்திற்கு 210 நாட்களும் கட்டாயம் பணிபுரிய வேண்டும். அந்தவகையில் கட்டாயம் சாராசரியாக மாதம் மூன்று சனிக்கிழமைகளில் பள்ளி இயங்குகிறது.*
*மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சி வகுப்புகள் வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கின்றது.*
*அடுத்ததாக,மழை,வெயில் மற்றும் மாவட்ட ஆட்சியரால் விடப்படும் உள்ளூர் விடுமுறைகள் எல்லாமே Compensate Holidays ஆகத்தான் வரும்.கட்டாயம் இந்த விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளிகள் வைத்து ஈடுசெய்ய வேண்டும்.*
*அடுத்ததாக Tour,Sports day மற்றும் Annual day இவைகளுக்கென்று தனியாக விடுமுறை விடப்படுவதில்லை.விடுமுறை நாட்களிலையோ அல்லது பள்ளி நாட்களிலையே நடத்தப்படும்.இந்த நாட்களில் கட்டாயமாக ஆசிரியர்கள் விடுப்பில் இருக்க முடியாது.பணியில்தான் இருக்க வேண்டும்.*
*அடுத்ததாக,அரசு விடுமுறை என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல.ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும்தான். அதுபோலத்தான் 12 நாட்கள் தற்செயல் விடுப்பும் (CL) அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.*
*முழுஆண்டுத் தேர்வுக்கான விடுமுறை 40 நாட்கள் என்பது தவறு.மே மாதம் மட்டும் விடுமுறை.அந்த விடுமுறையிலும்,மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்துவது,மாணவர்களுக்கு ரிசல்ட் போடுவது,அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவது போன்ற பணிகள் நிறைந்துள்ளன.*
*அடுத்ததாக,நாள் ஒன்றுக்கு ஆசிரியர்களின் பணிநேரம் நான்கு மணிநேரம் என்பது நவீன குமாராசாமியின் கருத்து தவறு*
*பயிற்சி வகுப்புகளுக்கு அப்பாற்பட்டு பள்ளி அலுவல் நேரம்*
*தொடக்கநிலைப் பள்ளிகளுக்கு காலை 9.10 முதல் 4.10 வரை*
*உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு காலை 9.30 முதல் மாலை 4.40 வரை பள்ளி செயல்படும்.*
*இந்த பள்ளி நேரங்களில் கட்டாயமாக ஆசிரியர்கள் 7 மணி நேரம் பணிபுரிய வேண்டும்.*
*LTC (Leave Travel Concession) -90% ஆசிரியர்கள் எடுப்பதில்லை.*
*வக்கனையாக, ஆசிரியர்களைப் பற்றி மட்டும் அவதூறாக குறைகாண வேண்டாமே*

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)