மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள எத்தனை முறை வேண்டு மானாலும் TET தேர்வு எழுதலாம்
TNTET - மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் TET தேர்வு எழுதலாம்
இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியு
ம்,
பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) விதிமுறை. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
7 ஆண்டுகள் செல்லத்தக்கது
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லை. வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்