104 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ உலக சாதனை
104 செயற்கைக்கோள்களையும் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது:
இஸ்ரோ அறிவிப்பு,
உலகிலேயே ஒரு நாடு ஒரு ராக்கேட் மூலம் அதிக செயற்கைக்கோள்களை ஏவுவது இதுவே முதல்முறை.
104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்து பி.எஸ்.எல்.வி சி37 உலக சாதனை படைத்துள்ளது. ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. கார்டோசாட்-2, ஐ.என்.எஸ் 1ஏ, ஐஎன்எஸ் 1பி ஆகிய இந்திய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி சி 37-லிருந்து பிரிந்து அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இன்று காலை 9:28க்கு விண்ணில் பாய தயாராக இருக்கும் பிஎஸ்எல்வி - சி 37 ராக்கெட்டில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி செயற்கைக்கோள்களும், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல் மற்றும் யூஏஇ ஆகியநாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக்கோள்களும், அமெரிக்காவிலிருந்து 8 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும். இது தவிர 101 நானோ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ப்ளாணட் என்ற நிறுவனம் 88 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி சி37 மூலம் விண்ணில் ஏவ உள்ளது. பொத்தமாக 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி சி37-ல் உள்ள செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1378 கிலோவாகும். இதில் அதிகபட்சமாக இந்திய செயற்கைக்கோளான கார்டோசாட்-2 மட்டும் 714 கிலோ எடை கொண்டது.
கார்டோசாட்-2:
இந்த செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் 505 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும், ரிமோட் சென்சிங் மற்றும் புவிசார்ந்த விஷயங்களை இந்த செய்ற்கைக்கோள் ஆராயும், மேலும் இந்த செயற்கைக்கோள் எடுக்கும் புகைப்படங்கள் ஒரே க்ளிக்கில் புவிப்பரப்பின் 10 கி.மீ பகுதியை தெளிவாக படம்பிடிக்கும். புவி அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியவும் இந்த செய்ற்கைக்கோள் மிகவும் உதவும் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்த சாதனை குறித்து கூறியுள்ள இஸ்ரோ தலைவர் கிரண் குமார் ''நாங்கள் சாதனைகளுக்காக இதனை செய்யவில்லை. பி.எஸ்.எல்.வியை முழுமையாக பயனபடுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இதனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
இன்று இஸ்ரோ வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி சி37 ராக்கெட்டை விண்ணில் ஏவியதால் இது தான் உலக சாதனையாக நீண்ட நாட்கள் இருக்கும். இதனையடுத்து அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் 91 ரக்கெட்டுகளை விண்ணில் ஏவும் முடிவில் உள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் முந்தைய முயற்சி தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தொடர்ந்து 35 முறை பி.எஸ்.எல்.வியை விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.