பிஎப் பணத்தை இணையம் மூலம் நீங்களே திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்! கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்!


        இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.


ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.
இந்தச் சேவையை பயன்படுத்துவது பயனர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல என்ற போதிலும் வேகமாக பிஎப் பெறுதல் முறைகளைப் பின்பற்ற முடியும் என்று கூறப்படுகின்றது.
இதற்காக அனைத்துக் கிளை அலுவலகங்களையும் சர்வரில் இணைக்கும் பணி நடந்து வருவது என்றும், இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்த உடன் இணையத்தில் சமர்ப்பிக்கக் கூடிய பிஎப் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் அதைப் பயன்படுத்தி எளிதாக பணத்தை திரும்பப் பெற இயலும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.
இணையம் மூலம் சில மணி நேரத்தில் எடுக்கக் கூடிய பிஎப் முறையில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்குப் பார்ப்போம். 
1 கோடி விண்ணப்பம்
ஓய்வூதிய நிதி ஆணையம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது 1 கோடி விண்ணப்பங்கள் வரை திரும்பப் பெறும் கோரிக்கைக்காக மட்டும் சமர்ப்பிக்கப்படுகின்றது.
  
சில மணி நேரத்தில் பிஎப் பணம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணையம் மூலம் செயல்படும் போது சில மணி நேரங்களில் வங்கி பரிவத்தனைகள் பொன்று விண்ணப்பித்த விண்ணப்பித்த அன்றே கிடைக்கும்.
  
தற்போதைய குறைந்தபட்ச நாட்கள்
பிஎப் அலுவலகங்களில் இப்போது பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் பெறும் போது குறைந்தது 20 நாட்களுக்குள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
50 துறை அலுவலகங்களில் பைலட் திட்டம் மூலம் ஏற்கனவே பிஎப் அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது மீதம் உள்ள 123 அலுவலகங்களை மத்திய சர்வருடன் இணைக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது. 
   ஆதார் அவசியம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இதற்காக அனைத்து பிஎப் கணக்குகளுக்கும் ஆதார் எண் அவசியம் என்று கூறுகின்றது. இதனால் பிஎப் சந்தாதார்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைத்தல் வேண்டும். 
ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு மட்டும் இல்லாமல் வங்கி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த முறை எளிதாக பணத்தை எடுக்க முடியும்.
  வரி விலக்கு
நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை.
இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை. 
   5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..?
ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும்.
நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி
பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும். 
   பிரிவு 80 சி
பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும்.
  
டிடிஎஸ்(TDS)
தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும்.
இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank