மாத ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரம்: சட்ட மசோதா தாக்கல்


தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தின் உச்ச வரம்பு ரூ.3,500-லிருந்து

ரூ.15 ஆயிரமாக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:-
தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் சட்டத்தில் மாத ஊதியம் ரூ.3,500-க்கு அதிகமாகப் பெறாதவர்கள் அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. இதனால், பணி நீக்கக் காலத்தில் அவர்கள் ஊதியம் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த ஊதியத்தின் உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது.
இதன்படி, மாத ஊதிய உச்சவரம்பானது ரூ.3,500-லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் சட்டத்தை திருத்தம் செய்யப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)