*ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !!


        2016 – 2017 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டின் படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற விதி அமலில் இ
ருந்தது.
         ஆனால் உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கருப்புப் பணத்தைக் கொண்டு தங்க நகைகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தற்போது தாக்கல்

செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அந்த உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பொது சரக்கு பட்டியலில் தங்க நகை சேர்க்கப்படவுள்ளதால், வருமான வரிச்சட்டப்படி ஒரு சதவீத வரி வசூலிக்கப்படவுள்ளது. இந்த விதி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து பொருட்களை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொருட்களை விற்றவர் அதே அளவு தொகையை அபராதமாக திரும்பிச் செலுத்த வேண்டும் என்ற சட்டமும் அமலுக்கு வருகிறது._

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank