பிளஸ் 2 தனித்தேர்வர் விண்ணப்பிக்க மதுரையில் 9 சேவை மையங்கள்.


         பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் வகையில் 9 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி கூறியதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஏற்கெனவே விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் 9 இடங்களில் விண்ணப்பிக்கலாம்.

 பிளஸ் 2 தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க உதவும் வகையில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் விவரம்: மதுரைக் கல்வி மாவட்டத்திற்கு காமராஜர் சாலை

செüராஷ்டிர மேல்நிலைப் பள்ளி (ஆண்களுக்கு), பொன்னகரம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பெண்களுக்கு), திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலருக்கும்).

 மேலூர் கல்வி மாவட்டத்தில் யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (ஆண்களுக்கு), மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பெண்களுக்கு), கருங்காலக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலருக்கு).  உசிலம்பட்டி கல்வி மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பெண்கள்), திருமங்கலம் பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்), உசிலம்பட்டி இஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்).

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)