முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!


         உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். 


          இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.
இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.
தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.
புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.
6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.
மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)