ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல்!!
எஸ்.எல்.வி. மார்க்-2
‘சார்க்’ நாடுகளுக்கான தொலைதொடர்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்காக ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2’ ராக்கெட் அடுத்த மாத (மார்ச்) இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொ
டர்ந்து ‘கிரொயோஜெனிக்’ என்ஜின் விரைவில் சோதனையிடப்பட உள்ளது. பொதுவாக விண்வெளியில் மனிதனை அனுப்புவது முக்கியம் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் இதனை கருத்தில் கொண்டு ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.
தற்போது அனுப்பியுள்ள 104 செயற்கைகோள்கள் கடந்த 3 மாதங்களில் இதற்கான பணிகளை இரவு பகலாக செய்து முடித்தோம். இவ்வளவு எண்ணிக்கை கொண்ட இந்த செயற்கைகோள்கள் விண்ணில் ஒன்றோடு ஒன்று மோதி விடாமல் தடுப்பதற்காக நாங்கள் இதனை ஒரு சவாலாக எடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளோம். இதன் மூலம் நேரமும் குறைந்துள்ளது.
நம்பகத்தன்மை
பி.எஸ்.எல்.வி. வரலாற்றில் குறைந்த கவுண்ட்டவுனுடன் ஏவப்பட்ட திட்டம் வெற்றிகரமாக இன்று செயற்கைகோள்களை நிலைநிறுத்தியுள்ளது. ‘பி.எஸ்.எல்.வி’ தொடர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் பி.எஸ்.எல்.வி.க்கு நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.
இதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களுடைய செயற்கைகோள்களை நம்மிடம் கொடுத்து விண்ணில் செலுத்த கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் நம்முடைய நம்பகத்தன்மைக்கு ஏற்ப பிறநாடுகளும் அவர்களுடைய செயற்கைகோள்களை நம்மிடம் செலுத்தி அனுப்புகின்றனர்.
சர்வதேச சந்தையில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு தற்போது தேவை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விண்ணில் செலுத்துவதற்கான கட்டணம் நம்மிடம் குறைவாகத்தான் உள்ளது. மேலும் இந்தக் கட்டணத்தை குறைப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது அனுப்பப்பட்டுள்ள 104 செயற்கைகோள்களில் 88 செயற்கைகோள்கள் தங்களுடைய பணியை தொடங்கிவிட்டன. மீதமுள்ளவை ஓரிரு நாட்களில் பணியை தொடங்கும்.
இதுதவிர வரும் ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ‘கார்டோ சாட் (2இ)’ அனுப்பப்பட உள்ளது. தொடர்ந்து ‘ஜி-சாட்-17,’ ‘ஜி-சாட்-19’ என்ற தகவல் தொடர்புக்கான செயற்கைகோள்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த செயற்கைகோள்களை இந்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊக்கம் அளிக்கிறது
இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, “ஒவ்வொரு முறையும் நான் ஸ்ரீஹரிகோட்டா வரும்போது செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படுவதை பார்க்கிறேன். இது மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. கார்டோசாட்-2 ரக செயற்கைகோள்கள் ஏற்கனவே விண்ணில் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இஸ்ரோ செயற்கைகோள் மையம் இன்னும் 2 மாதங்களில் தனது 100-வது செயற்கைகோள் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யும்” என்றார்.