பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? தண்டனை என்ன ?


பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 'முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என,
தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* தேர்வு அறையில் புத்தகம், விடைகள் அடங்கிய, 'பிட்' காகிதம் வைத்திருந்து, அதை பார்த்து எழுதும் முன், கண்காணிப்பாளரிடம் மாணவர் தானாக ஒப்படைத்தால், விளக்க கடிதம் எழுதி வாங்கி எச்சரிக்கப்படுவார்; மறுநாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்


* காப்பியடிக்க புத்தகம், பிட் பேப்பர் வைத்திருந்ததை, கண்காணிப்பாளர் கண்டுபிடித்து, மாணவர் அதை பார்த்து எழுதாமல் இருந்தால், அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும். மீண்டும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். குறிப்பிட்ட பாடத்திற்கான தேர்வை, ஓராண்டுக்கு எழுத முடியாது

* மற்றொரு மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினால், அறையிலிருந்து வெளியேற்றப்படுவார். அடுத்த பாட தேர்வுகளை எழுதலாம். ஆனால், பிரச்னைக்குரிய பாடத்தில் தேர்வு எழுத, ஓர் ஆண்டு தடை விதிக்கப்படும்

* காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால், மதிப்பெண் நிறுத்தி வைக்கப்படும்; இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

* தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு பரிசு கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட முயன்றால், குறிப்பிட்ட காலத்துக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* அதிக மதிப்பெண் தரக்கோரியோ, அறை கண்காணிப்பாளரை வசைபாடியோ, விடைத்தாளில் வார்த்தைகள் இடம் பெற்றாலோ, கடிதம் எழுதினாலோ, மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்

* அறை கண்காணிப்பாளர், அதிகாரிகளை தாக்கும் விதமாக, மாணவர் செயல்பட்டால், அறையிலிருந்து வெளியேற்றப்படுவார். மற்ற பாட தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்

* விடைத்தாளை வழங்காமல் வெளியே கொண்டு வந்தால், தேர்வு ரத்து செய்யப்படும்

* வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* விடைத்தாளில் பெயர், இனிஷியல், வேறு சில சிறப்பு குறியீடுகள் எழுதினால், வினாத்தாளில் பதில் எழுதி, அதை மற்ற மாணவருக்கு அனுப்பினால், தேர்வு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank