வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் ‘நீட்’ தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும் மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) இந்த ஆண்டு மே 7-ந் தேதி நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. இத்தேர்வை நடத்துகிறது.
தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 25 என்று மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. இட ஒ
துக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு அளிக்கப்படும். எனவே, அவர்களுக்கான வயது வரம்பு 30 ஆகும். ஆனால், அனைத்து பிரிவினரும் அதிகபட்சம் 3 தடவை மட்டுமே தேர்வு எழுத முடியும். இந்த ஆண்டு எழுதும் தேர்வுதான், முதல் தடவையாக கணக்கில் கொள்ளப்படும்.

 இதற்கு முன்பு எழுதப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதால், அத்தேர்வுகளில் பங்கேற்றவர்களும் இனிமேல் 3 தடவை தேர்வு எழுதலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)