மீண்டும் வருகிறதா நோக்கியாவின் 3310?
நியூயார்க்: உலகப் புகழ்பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவின் பிரபல மாடல் 3310 மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் இந்த மாத இறுதியில் 'உலக அலைபேசி மாநாடு' நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவின் பிரபல மாடல் 3310 மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'டிஜிட்டல் ட்ரென்ட்ஸ்' என்னும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய நோக்கியா 3310 அலைபேசியானது பழைய வகையைப்போன்றே எளிதில் உடையாத உடல் பாகத்துடனும், நீடித்து உழைக்கும் பேட்டரியுடனும் அமைந்திருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம்தான் நோக்கியா நிறுவனமானது தனது நோக்கியா என்னும் வணிகப்பெயர் மூலம் அலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளை தயாரிக்க HMD க்ளோபல் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது.
அதேநேரம் இம்மாதம் 26-ஆம் தேதி அன்று ஆண்ட்ராய்ட் இயங்கு செயலியைக் கொண்ட தன்னுடைய முதல் அலைபேசியான C6-ஐ சீனாவில் நோக்கியா வெளியிட உள்ளது.