ஜியோவையே ஓரங்கட்டிய ஏர்டெல் 4 ஜி... பட்டைய கிளப்புங்க !!
தொலைதொடர்பு நிறுவனங்களையே புரட்டிப்போட்டு, வாடிக்கையாளர்களையும் பரபரப்போடு வைத்திருக்கும் வேலையை கடந்த செப்டம்பர் முதல் ரிலையன்ஸ் ஜியோ செய்து வந்தது. அதனையே தன்னுடைய சவாலாக எடுத்துக்
கொண்டு, தன்னுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும்படி பல சலுகைகளை ஏர்டெல் வழங்கி வந்தது.
அந்தவகையில், சமீபத்தில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிவிப்பில், ஜியோவின் இணையதள சேவை வேகத்தைவிட, ஏர்டெல் 4 ஜியின் வேகம் தான் அதிகம் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
ஜியோ துவங்கியபோது இருந்த வேகம் இப்போது இல்லை. கடந்த வருடம் டவுன்லோடு வேகம் 5 எம்பியாக இருந்த ஏர்டெல் 4 ஜி தற்போது 11.9 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜியோவின் தொடக்க கால வேகம் 18 எம்பியாக இருந்து தற்போது வெறும் 8.3 ஆக குறைந்திருக்கிறது என்று அந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.