AEEO - நேரடி கல்வி அலுவலர்களுக்குஊக்க ஊதிய உயர்வு இல்லை
'நேரடியாக நியமிக்கப்பட்ட 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு இல்லை' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பட்ட மேற்படிப்பு முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது எம்.எட்., முடித்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும். இவர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்விஅலுவலராக நியமிக்கப்பட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு தொடரும்.சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு கேட்டு, தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனு அனுப்பினர்.ஆனால், இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ெவளியிடப்பட்ட உத்தரவில், 'நேரடியாக நியமன உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம், 'நிர்வாக அலுவலர் பணியிடமாக' கருதப்படுகிறது. இதனால், பதவி உயர்வு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களை போன்று ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.