ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை


நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள, சாலை போக்குவரத்து சார்ந்த தகவல்களை, ஒரே இடத்தில் குவித்து, அவற்றை அனைத்து இடங்களிலும் பார்க்கும் வகையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது, 'பரிவாகன்' என்ற மென்பொருளை, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு வழங்கி உள்ளது. அதற்கு வரும் தகவல்கள், டில்லியில் உள்ள சர்வரில் சேமித்து வைக்கப்படும். இதை, அனைத்து, ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் பார்க்கலாம்.
இது, செயல்பாட்டுக்கு வந்ததும், அனைவரும், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணம், கோப்பு இருக்கும் இடம் என, அனைத்தையும்
மனுதாரர் அறிய முடியும். இந்த நடைமுறை, மார்ச்சில் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)