பக்கவாதம் வந்தவர்கள் நினைப்பதை டைப் செய்யும் கணினி!
வளர்ந்து வரும் நாடுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் வருடத்துக்கு 16 லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர்
மோசமான வாழ்க்கைச் சூழல்களால் பக்கவாதம் வருகிறது என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மன அழுத்தம், பயம்கலந்த படபடப்பு, வேலைசார்ந்த மன உளைச்சல் ஆகியவற்றால் இதயநோய்கள் வருவதும், பக்கவாதம் வருவதும் இளைஞர்களிடையே கூட சகஜமாகியுள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
இதனால் தகவல் பரிமாற்றங்களைச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படியானவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மூளையில் நினைப்பதை டைப் செய்யும்வகையில் கம்ப்யூட்டரை உருவாக்க அவர்கள் முயற்சித்தனர்.
இதற்காக மின்சாரத் தாக்குதலால் கை, கால் செயலிழந்த மற்றும் வாய் பேசமுடியாத ஒருவரை வைத்து ஆய்வு செய்தனர். அவருடைய மூளையில் நினைப்பதை கம்ப்யூட்டர் மூலமாக டைப் செய்ய முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளது.
அவர் என்ன சொல்ல வேண்டும் என்று மனதில் நினைக்கிறாரோ? அது மூளைவாயிலாக பரிமாற்றமாகிறது. அப்போது ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் உள்வாங்கி அதை டைப் செய்கிறது. இந்தக் கருவியை தலையின் மேற்பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது, மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாகக் கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது. இது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில மாற்றங்களைச் செய்து இந்த தொழில்நுட்பத்தை எளிமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.