காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!
இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வயர்லெஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. உதாரணமாக ப்ளுடூத் ஹெட்போன்களை எடுத்துக்கொண்டால் முன்பு வந்த மா
டல்களை மாற்றம் செய்து வயரற்ற ஒன்றாக வெளியிட்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதேபோல் நாம்
பயன்படுத்தும் டேட்டா பரிமாற்றம் கூட பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டுள்ளது.
வைஃபை மூலம் நாம் தகவலை பகிர்ந்துகொள்ள முடியும் என்பதனால் கேபிள் பயன்பாடு குறைந்தது. இதன் நன்மை என்று கூறினால், ஓர் இடத்தில் எந்தவித வயர்களும் இல்லை என்றாலும் விரைவாகவும் எளிமையாகவும் தகவல் பரிமாற்றம்
தற்போது அதற்கு எளிமையான ஒரு வழியை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் புதுமையான் கருவி ஒன்றினை வடிவமைத்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளாக இருக்கும் மின்னணு சாதனங்களை காந்த சக்தி மூலம் சார்ஜ் செய்யும் வசதியைக் கண்டறிந்துள்ளனர். அந்த கருவிகள் சோதனை செய்யப்பட்டு தற்போது அதன் பயன்பாடுகள் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.