ஆர்கிடெக்சர் மாணவர்களுக்கான தேசிய வடிவமைப்பு போட்டி!!!


        கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு துறைசார்ந்த மாணவர்களுக்கு, ’டிரான்ஸ்பரன்ஸ் 2016’ எனும் தேசிய அளவிலான கட்டடக்கலை வடிவமைப்பு போட்டியை, செயின்ட் கோ
பைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.

’ஸ்பேஷ் இன் மோஷன்’ எனும் தலைப்பிலான இப்போட்டியில், நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்று, தங்களது படைப்புத்திறன்களை சமர்ப்பித்தனர். இதில், தகுதி பெற்ற சிறந்த 8 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. 
இறுதி போட்டி சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பி.சந்தானம், கே.வி.ஆர்., நிறுவனத்தின் இயக்குனர் சென் கபாடியா, டி.பி.ஏ., நிறுவனர் சோனாலி பகவதி மற்றும் ஆர்கிடெக்சர் அட் ஸ்பேஸ் மேட்ரிக்ஸ் இயக்குனர் அனுப் நாயக் ஆகியோர் பங்கேற்றனர். 
இதில், ஐ.பி.எஸ்., இந்தூர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், குணால் ஜெயின் மற்றும் ஷிவானி அகர்வால் முதல் பரிசு (ரூபாய் 75 ஆயிரம்) பெற்றனர். இரண்டாம் பரிசை (ரூபாய் 50 ஆயிரம்) சித்தகங்கா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த மாணவர்கள், ஐஸ்வர்யா, ராகவேந்திரா மற்றும் ரக்சா மனோகர் ஷெட்டி ஆகியோர் பெற்றனர். 
’டிரான்ஸ்பரன்ஸ் 2016’ல் மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டியும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூபார் 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank