ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி.?? குழப்பம் அடைய வேண்டாம், எல்லாமே தானாகவே நடக்கும்.!

ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி.?? குழப்பம் அடைய வேண்டாம், எல்லாமே தானாகவே நடக்கும்.!

என்னது..? ஜியோ ப்ரைம் மெம்பராக மாற வேண்டுமா..? -
என்று குழப்பம் அடைய வேண்டாம். நீங்கள் ஏற்கனவே ஜியோ சேவையை அனுபவிக்கும் பயனராக இருப்பின் நீங்கள் தானாகவே ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறி விடுவீர்கள் அதாவது எப்படி ஜியோ வெல்கம் சலுகையில் இருந்து ஹேப்பி நியூ இயர் சலுகைக்கு தானாகவே இடம்பெயர்ந்தீர்களோ அவ்வாறே இப்பொழுதும் எல்லாமே தானாகவே நடக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்காக ரூ.99/- செலுத்த வேண்டும். பின்பு மாதந்தோறும் உங்களுக்கு தேவையான ஜியோ சேவைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டண திட்டங்களின் கீழ் விலை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
ஒருவேளை..
இதுதவிர்த்து, ஜியோவின் கட்டண திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியானதும் ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ளலாம் என்று காத்துக்கிடந்த மற்றும் வெளியான ஜியோ கட்டண திட்டங்கள் ஒருவேளை பிடித்துப்போய் 'வாவ் எனக்கு இப்போதே ஜியோ சேவை வேண்டும்' என்று ஆர்ப்பரிக்கும் பிற சேவை வடிக்கையாளராகிய எவருமே ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது. இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் மொபைல் எண்ணை மாற்றாமலேயே ஒரு ஜியோ ப்ரைம் பயனர் ஆக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள முடியும்.
வழிமுறை #01
முதலில் நீங்கள் 'PORT' (போர்ட்) என்று டைப் செய்து, உங்கள் மொபைலால் எண்ணை இணைத்து - 1900 என்ற மத்திய அரசின் மொபைல் எண் பெயர்வுத்திறன் எண்ணிற்கு உங்கள் மொபைல்போன் எண்ணில் இருந்து ஒரு மெஸேஜ் அனுப்ப வேண்டும். உதாரணமாக : செய்தி பெட்டியில் 'போர்ட் 9999xxxxxx' என்று டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்புவதின் மூலம் குறியீட்டுடன் கூடிய ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள்.
வழிமுறை #02
ஆண்ட்ராய்டு பயனர்கள் முதலில் தங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ ஆப்ஸ்களை பதிவிறக்கிய பின்னர் ஒரு ஆபர் குறியீட்டை உருவாக்க வேண்டும்.
வழிமுறை #03
இப்போது உங்கள் ஆதார் எண் மூலம் ஒரு ஈகேவ்வைசி (eKYC) சரிபார்ப்பு நிகழ்த்தி எந்தவொரு ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி கடைகளில் இருந்தும் ஒரு ஜியோ சிம் அட்டையை வாங்கிக்கொள்ளவும் முக்கியமாக உங்களுக்கு கிடைத்த சான்றாதாரம் குறியீட்டை நீங்கள் சிம் அட்டை பெறும் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
வழிமுறை #04
உங்கள் பழைய டெலிகாம் வழங்குநர் நிறுவனத்திற்கு நீங்கள் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை பாக்கிகள் இருப்பின் அதை கட்டி முடிக்க உங்கள் எண் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாற்றப்படும்.
வழிமுறை #05
உங்கள் பாக்கிகள் தீர்க்கப்பட்ட பிறகு, நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறி பல்வேறு அற்புதமான ஜியோ சலுகைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி அனுபவிக்கும் தகுதியை பெற்றுளீர்கள் என்பதை ஒரு எம்எஸ்எஸ் மூலம் ஜியோ நிறுவனம் உறுதி செய்யும். இனி நீங்களும் வருடத்திற்கு ஒருமுறை ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்காக ரூ.99/- செலுத்த வேண்டும். பின்பு மாதந்தோறும் உங்களுக்கு தேவையான ஜியோ சேவைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டண திட்டங்களின் கீழ் விலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)