இந்தியாவில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்களில் பிற மாநிலங்களை விட தமிழகத்திற்குத் தன் முதலிடமாம்!


      அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக மத்திய ம
னித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் பாராளுமன்ற மேலவைக் கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது.
         அகில இந்திய உயர்கல்வி ஆய்வகம் வெளியிட்ட சர்வே ஒன்றில் கடந்த மூன்றாண்டுகளில் (2013-14 முதல் 2015-16 வரை)இந்தியாவெங்கிலும் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் மூலமாக முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை முறையே 69,862. 2015- 16 வரையிலான கல்வி ஆண்டில் தேர்ச்சியுற்று முனைவர் பட்டம் பெற்ற 24,171 இந்திய மாணவர்களில் சுமார் 3,973 பேர் தமிழக பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களே.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து அடுத்ததாக உத்தரபிரதேசம் 2,205 முனைவர் பட்ட மாணவர்களையும், கர்நாடகா 1,945 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கித் தந்துள்ளனவாம்.
 இதனடிப்படையில் முனைவர் பட்ட தேர்ச்சி விகிதத்தில் பிற இந்திய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளியது தமிழகம் என்பது உறுதியாகிறது. மொத்த தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் ஈட்டியது 16.44%. பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான என்.பசுபதி தமிழக மாணவர்களின் இந்த வெற்றி குறித்துப் பேசுகையில் அரசுக் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு NET/ SLET தேர்வுகளைப் போலவே முனைவர் பட்டச் சான்றிதழும் தகுதி காண் மதிப்பெண்ணாகக் கருதப்படுகிறது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் அதற்கென தனி மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்று கூறினார்.
எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் அதிக்கபடியான முனைவர் பட்டதாரிகளால் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் ஆய்வுப் பணிகளில் எந்த விதமான கவனக் குறைவுகளோ, ஆராய்சிகளில் தரகுறைவுகளோ ஏற்பட்டு விடவில்லை. அவை நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் முனைவர் பட்டத்துக்கான பி.ஹெச்.டி பெறுகையில் அது எவ்விதமாகப் பெறப்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கான தர வரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது கேட்டகிரி B Phdகளும், எக்ஸ்டர்னல் Phd களும் ரெகுலர் Phd க்கு இணையாக கருதப்பட மாட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022