இஸ்ரோவில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் வேலை காலி


       இஸ்ரோ அமைப்பில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ண
ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

        இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மார்ச் 7 ஆகும். இதற்கான அறிவிப்பை இஸ்ரோ அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலக்கெடு:
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய காலக்கெடு மார்ச் 7. 
காலியிடம் விவரம்:
மொத்த பணியிடங்கள்: 87
பதவியின் பெயர்:
விஞ்ஞானி/என்ஜீனியர் எஸ்சி 10வது லெவல். கீழ்க்கண்ட கல்வித் தகுதி உடையவர்களுக்கான வேலை.
எலக்ட்ரானிக்ஸ்: 42
மெக்கானிக்கல்: 36
கம்ப்யூட்டர் சயின்ஸ்: 9
தகுதிகள்:
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும்.
வயது:
மார்ச் 7ம் தேதி நிலவரப்படி அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். இருப்பினும் அரசு விதிமுறைகளின் படியிலான வயது உச்சவரம்பு தளர்வும் உண்டு.
தேர்வு முறை:
மே 5ம் தேதி எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். பெங்களூரு, அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி, திருவனந்தபுரத்தில் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ. 56,100 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
விருப்பம் உடையவர்கள் isac.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஹோம் பேஜில் Jobs என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் கேரியர் பிராகரசன் என்ற அட்டவணையில் scientist/engineer என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது புரமோஷன் கிரெட்டரியா தோன்றும்
அதில் போய் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேம்டும். ஆன்லைன் பேங்கிங் மூலமாக இதை செலுத்த வேண்டும்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் வழங்கப்படுவது தொடக்கம்: பிப்ரவரி 15
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 7
தேர்வு தேதி: மே 5.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)