மீத்தேன் திட்டம் என்றால் என்ன?


 நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.


2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.

அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........??

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)