இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பைக்கு முதலிடம்!!!


இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை என ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
ஆய்வில் சென்னைக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.


ஆய்வு முடிவு:

இதுகுறித்து நியூ வேர்ல்டு வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவிலுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி. இந்தியாவில் 2 லட்சத்து 64 ஆயிரம் மில்லியனர்களும் (கோடீஸ்வரர்கள்), 95 பில்லியனர்களும் (பெரும் கோடீஸ்வரர்கள்) உள்ளனர்.

டாப் 5:

மும்பையில் உள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு 56 லட்சம் கோடி ரூபாய். இதில் 46 ஆயிரம் மில்லியனர்களும், 28 பில்லியனர்களும் உள்ளனர். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் டில்லியும்(23 ஆயிரம் மில்லியனர்கள், 18 பில்லியனர்கள்), மூன்றாவது இடத்தில் பெங்களூருவும் (7,700 மில்லியனர்கள், 8 பில்லியனர்கள்) உள்ளன. அடுத்த இரு இடங்களான 4வது இடத்தில் ஐதராபாத்தும்(9 ஆயிரம் மில்லியனர்கள், 6 பில்லியனர்கள்), 5வது இடத்தில் கோல்கட்டாவும்(9,600 மில்லியனர்கள், 4 பில்லியனர்கள்) பிடித்துள்ளன.

7வது இடத்தில் சென்னை:

மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 9.99 லட்சம் கோடிகளுடன் சென்னை இப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. சென்னையில் 6,600 மில்லியனர்களும், 4 பில்லியனர்களும் உள்ளனர்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank