காலி கழிவறைகளைக் கண்டறிய ஆப்ஸ்!
மக்களின் அவசரத் தேவைக்கென, அருகாமையில் காலியாக இருக்கும் கழிவறைகளைக் கண்டறிய உதவும் புதிய ஆப்ஸ்-ஸை மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது ஜ
ப்பானின் தொலைதொடர்பு நிறுவனமான கேடிடிஐ.
கழிவறை கதவுகளில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் மக்கள் கழிவறை காலியாக உள்ளதா அல்லது வேறு யாரேனும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என்னும் தகவலை அறிந்துகொள்ளும் வகையில் இந்த சேவை வழங்கப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் நிறுவனத்தின் மத்திய கணினி அமைப்புக்கு அனுப்பப்படும். அந்த அமைப்பு அருகில் பயன்படுத்தக்கூடியவகையில் காலியாக உள்ள கழிவறை குறித்த தகவல்களைத் தெரிவிக்கும்.
அடுத்த முயற்சியாக கழிவறைக்கு எவ்வளவு நீரைப் பயன்படுத்துவது என்பது குறித்த ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.