ஜாம்' எனப்படும் ஜன்தன் - ஆதார் - மொபைல் பரிவர்த்தனைகளே அரசின் இலக்கு
'ஜாம்' எனப்படும் ஜன்தன் - ஆதார் - மொபைல் பரிவர்த்தனைகளே அரசின் இலக்காக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். பல்லாண்டு காலமாக நடைபெற்று வந்த வரி ஏய்ப்பை தடுக்க அது உதவியது. தற்போது உள்ள நிலையில் உலக அளவில் பொருளாதார நிலை அத்தனை ஸ்திரமாக இல்லை. ஆனால் இந்தியாவில் பொருளாதாரம் நிலையானதாக உள்ளது.
நமது பொருளாதார காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. இந்த நிலையில்தான் நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
'ஜாம்' எனப்படும் ஜன்தன் வாங்கி கணக்கு - ஆதார் அட்டை மூலம் ஒருங்கிணைந்த பணமற்ற மொபைல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே அரசின் முக்கிய இலக்காக உள்ளது
இவ்வாறு தெரிவித்த ஜேட்லி தனனுடைய உரையை தொடர்ந்து வருகிறார்.