வளர் இளம் பருவத்தினருக்கு இன்று குடற்புழு மாத்திரை
தமிழகத்தில், இரண்டு கோடி குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்கும் மாத்திரைகள், இன்று வழங்கப்பட உள்ளன
.
நாடு முழுவதும், ஒன்று முதல், 19 வயது வரையுள்ள, 24.10 கோடி குழந்தைகள் மற்றும் வளரும் இளம் பருவத்தினருக்கு, குடற்புழு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேபோன்று, ரத்த சோகை பாதிப்பும் உள்ளது. இதனால், மாணவர்களுக்கு மந்த நிலை ஏற்படும்;
சிந்தனை திறன் குறையும் அபாயம் உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், ஒன்று முதல், 19 வயது வரையுள்ள, இரண்டு கோடி குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு, குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இன்று வழங்கப்பட உள்ளன. இந்த முகாம், 56 ஆயிரத்து, 856 அரசு மற்றும் தனியார் பள்ளிகள்; 54 ஆயிரத்து, 439 அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில், 16 லட்சம் குழந்தைகளுக்கு, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 'குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுவதால், இன்று, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்படாது' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.