திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் நிற்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்


        திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச
நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

           நாடு முழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை. எனினும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank