பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­மனை ஐ.டி.சி., நிறு­வனம் கள­மி­றங்க திட்டம்!!!


       ஓட்டல், நுகர்­பொருள் உள்­ளிட்ட துறை­களில் ஈடு­பட்டு வரும், ஐ.டி.சி., நிறு­வனம், பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­ ம­னை­களை அமைப்­பதன் மூலம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யிலும் கால் பதிக்க உள்­ளது.


இதற்­காக, ஐ.டி.சி., நிறு­வனம், சிறப்பு தீர்­மா­னத்தின் மூலம், அதன் பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளிடம் ஒப்­புதல் கோரி, சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளது. 
நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழு, இந்­தி­யாவில், உலகத் தரம் வாய்ந்த, நவீன வச­தி­க­ளுடன் கூடிய, பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ ­ம­னை­களை அமைக்க, ஏற்­க­னவே ஒப்­புதல் அளித்­துள்­ளது.பங்கு முத­லீட்­டா­ளர்கள் தங்கள் ஆத­ரவை, நிறு­வ­னத்தின் வலை­த­ளத்தில், மின்­னணு ஓட்­டுப்­ப­திவு மூல­மா­கவும்; தபால் ஓட்டு வாயி­லா­கவும் தெரி­விக்­கலாம். 
பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­ம­னைகள் மூலம், வெளி­நா­டு­களில் இருந்து வரும் சுற்­றுலா பய­ணிகள், உயர் தர சிகிச்சை பெற வழி­வகை செய்­யப்­படும்.
கடந்த, 2015 – 16ல், நிறு­வ­னத்தின், நுகர்­பொருள் பிரிவின் வருவாய், 28,409.83 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 2030ல், 1 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என எதிர்­பார்ப்­ப­தாக, ஐ.டி.சி., நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank