இந்தியாவில் "பிரமோஸ் அதிவேக ஏவுகணை" விரைவில் சோதனை!
டி.ஆர்.டி.ஓ. தலைவர் கிறிஸ்டோபர் பேசும்போது, "பிரமோஸ் ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பானது உருவாக்கி சோதித்து வ
ருகிறது. இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையின் அதிநவீன வடிவத்துடன் காட்சியளிக்கும் பிரமோஸ் அதிவேக ஏவுகணை ஒன்றை அடுத்த மாதம் 10-ந் தேதி ஏவி சோதிக்க இருக்கிறது, டி.ஆர்.டி.ஓ. இந்த அதிவேக ஏவுகணை 450 கி.மீ தொலைவுக்கு சென்று தாக்கும். குறிப்பாக, பாகிஸ்தானின் பெரும்பகுதி மற்றும் சீனாவின் குறிப்பிட்ட பகுதிகளில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமையுடன் இருக்கும்" என்றார்.