விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்!


         இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஷாவ்னா பாண்டியா என்ற பெண் விண்வெளிக்குச் செல்ல இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.


         2018- ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இந்த விண்வெளி பயணத் திட்டத்தின் கீழ் பங்கேற்கவுள்ள நபர்களை நாசா அண்மையில் வெளியிட்டது. அதில், இந்திய

வம்சாவழியை சேர்ந்த ஷாவ்னா பாண்டியாவும் இடம்பெற்றுள்ளார். இதனால் விண்வெளி செல்லும் மூன்றாவது இந்திய வம்சாவழி பெண் என்ற பெருமையும் ஷாவ்னாவை சேரும்.கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து ஷாவ்னா பாண்டியா விண்வெளி செல்லவிருக்கிறார். 
நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களை மட்டுமே, விண்வெளிக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் ஷாவ்னா ஒரு மருத்துவர். எனவே இதற்கான சிறப்பு பயிற்சியை நாசா மையத்தில் ஷாவ்னா பாண்டியா மேற்கொண்டு வருகிறார்.இது குறித்து ஷாவ்னா பாண்டியா முக நூலில் எழுதியிருக்கிறார். ' இதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் கொடுத்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி. விண்வெளிக்கு செல்வதை பற்றியும் அங்கு தெரிந்து கொள்ளும் விஷயங்கள் பற்றியும் மிக ஆர்வமாக இருக்கிறேன். என்னை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. நரம்பியல் நிபுணருக்கான பயிற்சியை சில காலம் எடுத்துள்ளேன். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட லைசன்ஸ் படி நான் பொது மருத்துவர் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதே போல நான் ஒபேரா பாடகியும் அல்ல. ஒரே முறை ஒபேரா மேடையில் பாடியிருக்கிறேன். ஒரே ஒரு குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பாக்சர் இல்லை. ஒரு மருத்துவராகவும், விண்வெளி ஆரய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்குவேன்' என்றுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)